கடவுள் உண்மையா பொய்யா
கடவுள் உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் அதிகாரபூர்வமாக இல்லை என்று தான் தோன்றும் சற்று யோசித்து பாருங்கள் கடவுள் உண்டு என்றால் அவருக்கு என்னதான் வேலை கடவுள் எப்படி தோன்றினார் கடவுள் பார்வையில் உலகம் இயங்குகிறது என்றால் தவறு எப்படி நடக்கும் உயிரினத்தை படைத்தது கடவுள் என்றால் சுனாமி,பூகம்பத்தால் மக்களை ஏன் அழிக்க வேண்டும் அதற்கு படைக்காமல் இருக்கலாமே.ஒருவனை ஊனமாகவும் ஒருவனை ஒழுங்காகவும் படைத்ததற்கு காரணம் தான் என்ன கேட்டால் போன பிறவியில் செய்த பாவம் என்பார்கள் இது என்ன நியாயம் போன பிறவியிலேயே தண்டிக்கலாமே சரி கடவுள் நம்பிக்கை தான்என்றால் ஒரு கடவுள் போதாதா சிவன்தான் கடவுள் என்றால் பார்வதி எதற்கு சரி பார்வதி மனைவி என்றால் அது எப்படி நம்க்கு தெறியும் முருகருக்கு எதற்கு இரண்டு மனைவி,சரி ஒருவர் ஒரு தொழில் தொடங்குகிறார் என்றால் வினாயகரை முதலில் வழிபட்ட பின்பு தான் தொடங்க வேண்டும் அப்போது தான் வெற்றி கிடைக்கும் என்றால் அமெரிக்காவில் இருப்பவர் எப்படி தொழில் தொடங்கி வெற்றி பெறுகிறார் நன்கு யோசித்து பாருங்கள் கோயிலுக்கு செல்வதோ கடவுளை வனங்குவதோ தவறு ஒன்றும் இல்லை ஆனால் தீ மிதிப்பது,செடல் குத்தவது,ஆடு வெட்டுவது போன்ற மூடநம்பிக்கையை விட்டுவிடுங்கள் யோசித்து பாருங்கள் எந்த கடவுள் இதையெல்லாம் செய்ய சொல்கிறது ஒரு பள்ளி மாணவன் என்னதான் வேண்டினாலும் படித்தால்தான் தேர்வில் வெற்றி பெருவான் எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவன் தோற்றுபோலாம் ஆனால் தண்ணம்பிக்கை உள்ளவன் என்றும் தோற்க மாட்டான். இந்த பதிப்பு கடவுள் மீதான உங்கள் நம்பிக்கையை உடைப்பதற்காக அல்ல மூட நம்பிக்கையை உடைப்பதற்காக தான் எனவே தன்னம்பிக்கையோடு இருங்கள் வாழ்வில் வெற்றி பெறுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக